கனடா மீது அமெரிக்க அதிபர் Donald Trump வரி விதித்துள்ளார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தார்.
தவிரவும் கனடிய எரிசக்தி மீது 10 சதவீத வரி விதிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இந்த வரி கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை (04) அதிகாலை 12:01 மணிக்கு நடைமுறைக்கு வந்தன.
இதன் காரணமாக உலக வர்த்தக சந்தை ஏற்கனவே சரிவை எதிர்கொண்டுள்ளது.
இந்த வரிகளை கனடா எவ்வாறு எதிர்கொள்ளும் என்பது குறித்து செவ்வாய் காலை கனடிய பிரதமர் Justin Trudeau அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.