அமெரிக்காவுடன் வர்த்தக போருக்கு கனடா தயாராக இருப்பதாக கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump வாக்குறுதி அளித்தபடி, செவ்வாய்கிழமை (04) கனடாவுக்கு எதிராக வரிகளை அமுல்படுத்தினால் அதனை எதிர்கொள்ள கனடா தயாராகியுள்ளதாக அவர் கூறினார்.
இந்த வரிகளை “உயிர் பிழைப்புக்கான அச்சுறுத்தல்” என Melanie Joly வகைப்படுத்தினார்.
கனடாவை பொருளாதார ரீதியில் பாதிக்கும் வரி கட்டணங்கள் செவ்வாய்க்கிழமை நடைமுறைக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி திங்கட்கிழமை (03) தெரிவித்துள்ளார்.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார்.
தவிரவும் கனடிய எரிசக்தி மீது 10 சதவீத வரி விதிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.
இந்த விடயத்தில் அமெரிக்க நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருகிறது என தேசிய பாதுகாப்பு அமைச்சர் Bill Blair தெரிவித்தார்.
அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி கனடாவுக்கு எதிராக வரிகளை அறிவித்தால், அதற்கு பதிலளிக்க கனடா தயாராக இருக்கும் என அமைச்சர் கூறினார்.
அமெரிக்காவின் வரிகளுக்கு “வலுவாக பதிலளிக்க” தனது மாகாணமும் தயாராக உள்ளது என Ontario முதல்வர் Doug Ford கூறினார்.
அமெரிக்காவின் New York, Michigan, Minnesota மாநிலங்களுக்கு Ontarioவில் இருந்து அனுப்பப்படும் மின்சாரத்தை துண்டிக்க தயாராக உள்ளதாக Doug Ford தெரிவித்தார்.