Ontario மாகாண சபைத் தேர்தலில் இம்முறை போட்டியிட்ட ஐந்து தமிழர்களில் இருவர் வெற்றி பெற்றனர்.
Ontario மாகாண சபை கலைக்கப்பட்டு முன்கூட்டிய தேர்தல் February 27 ஆம் திகதி நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் Ontario PC கட்சியின் சார்பில் இருவரும், NDP, Liberal கட்சிகளின் சார்பில் தலா ஒருவர் என ஐந்து தமிழர்கள் வேட்பாளராக போட்டியிட்டனர்.
இவர்களில் லோகன் கணபதி, விஜய் தணிகாசலம் ஆகியோர் மீண்டும் வெற்றி பெற்றனர்.
இவர்கள் இருவரும் வெற்றி பெறும் மூன்றாவது தேர்தல் இதுவாகும்.
இம்முறை Ontario PC கட்சியின் வேட்பாளராக Markham-Thornhill தொகுதியில் லோகன் கணபதி, Scarborough-Rouge Park தொகுதியில் விஜய் தணிகாசலம், Scarborough-Guildwood தொகுதியில் ஜுட் அலோசியஸ் களம் இறங்கினர்.
Scarborough வடக்கு தொகுதியில் இரண்டு தமிழர்கள் போட்டியிட்டனர்.
இங்கு NDP வேட்பாளராக தட்ஷா நவநீதன், Liberal கட்சியின் வேட்பாளராக அனிதா ஆனந்தராஜன் ஆகியோர் போட்டியிட்டனர்.
Markham-Thornhill தொகுதியில், Ontario PC கட்சி வேட்பாளர் லோகன் கணபதி, 54 சதவீதமான வாக்குகள் வரை பெற்று வெற்றியடைந்தார்.
Scarborough-Rouge Park தொகுதியில், Ontario PC கட்சி வேட்பாளர் விஜய் தணிகாசலம், ஐம்பது சதவீதமான வாக்குகள் வரை பெற்று வெற்றியடைந்தார்.
Scarborough-Guildwood தொகுதியில் ஜுட் அலோசியஸ், இராண்டாவது அதிகூடிய வாக்குகளை பெற்று Liberal கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
Scarborough வடக்கு தொகுதியில் இரண்டாவது இடத்தை Liberal கட்சியின் வேட்பாளராக அனிதா ஆனந்தராஜன், மூன்றாவது இடத்தை NDP வேட்பாளராக தட்ஷா நவநீதன் பெற்று PC கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தனர்.