Paris நகரில் நடைபெறும் AI உச்சிமாநாட்டில் பிரதமர் Justin Trudeau உரையாற்றவுள்ளார்.
கனடிய பிரதமர் ஐரோப்பாவுக்கு சனிக்கிழமை (08) பயணமானார்.
Paris, Brussels ஆகிய நகரங்களுக்கு தனது ஐந்து நாள் பயணத்தை Justin Trudeau சனிக்கிழமை ஆரம்பித்தார்.
ஐரோப்பாவில் பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் Paris நகரில் நடைபெறும் உயர்மட்ட செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் உரையாற்றுவதும் அடங்குகிறது.
Brussels நகரில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களைச் சந்திப்பதுடன் NATO பொதுச்செயலாளர் Mark Rutteவுடன் ஒரு முக்கிய சந்திப்பை முன்னெடுப்பார்.
அமெரிக்கா ஜனாதிபதியின் வரி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் கூட்டணிகளை வலுப்படுத்த Justin Trudeau இந்த பயணத்தை உபயோகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பயணத்தில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள், NATO பொதுச்செயலாளர் ஆகியோருடன் பிரதமர் சந்திப்புகளை முன்னெடுக்கவுள்ளார்.
பிரதமர் இந்த ஐந்து நாட்களில் கனடாவின் வர்த்தக, பாதுகாப்பு உறவுகளை ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் வலுப்படுத்த முயற்சிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளும் கனடாவை போல் அமெரிக்கா ஜனாதிபதி மூலம் பொருளாதார, இறையாண்மை தொடர்பாக அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.