February 23, 2025
தேசியம்
செய்திகள்

கனடா-அமெரிக்கா எல்லையில் நிகழ்ந்த மூன்று வெவ்வேறு சம்பவங்களில் ஒருவர் பலி-15 பேர் கைது

கனடா-அமெரிக்கா எல்லையில் நிகழ்ந்த மூன்று வெவ்வேறு சம்பவங்களில் ஒருவர் பலியானார் , 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

RCMP இந்தத் தகவலை புதன்கிழமை (05) வெளியிட்டது.

அமெரிக்காவில் இருந்து தெற்கு Albertaவின் Coutts எல்லைக கடவையில் செவ்வாய்க்கிழமை (04) ஒருவர் கனடாவுக்குள் நுழைந்த பின்னர் அவர் மரணமடைந்ததாக RCMP கூறியுள்ளது.

எல்லையை கடக்க முயன்ற இவர், இரண்டாம் நிலை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்.

ஆனால் அவர் சோதனைக்காக நிற்காமல் கனடாவுக்குள் நுழைந்ததாக காவல்துறையினர் கூறினர்.

அவரை காவல்துறையினர் பின்தொடர்ந்த போது,  சுயமாக ஏற்படுத்தப்பட்ட துப்பாக்கி காயத்திற்கு உள்ளான இவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Alberta காவல்துறையினர் தொடர்பான சம்பவங்கள் குறித்து விசாரிக்கும் Alberta தீவிர சம்பவ பதிலளிப்புக் குழு இந்த விசாரணையை முன்னெடுக்கிறது.

இதற்கு முந்தைய தினம், காலை 6:15 மணி அளவில் நான்கு பெரியவர்கள், ஐந்து குழந்தைகள் Albertaவின் Coutts எல்லைக கடவைக்கு அருகே எல்லையைத் தாண்டி கனடாவுக்குள் நடந்து சென்றதாக RCMP கூறுகிறது.

இவர்கள் ஒன்பது பேரும் சுங்கச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கனடா எல்லை சேவைகள் முகமையகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதில் மூன்றாவது சம்பவம் January 14 ஆம் திகதி Manitoba எல்லைக் கடவையில் நிகழந்தது.

Emerson, Manitoba, நகருக்கு கிழக்கே ஆறு பேர் கால்நடையாக கனடிய எல்லையை கடந்தனர்.

இவர்கள் ஆறு பேரும் கைது செய்யப்பட்டு அதிகாரிகளிடம் விசாரணைக்கு கையளிக்கப்பட்டனர்.

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான எல்லையை பாதுகாக்க RCMP உறுதிபூண்டுள்ளது என்பதை இந்த சம்பவங்கள் காட்டுவதாக RCMP உதவி ஆணையர் Lisa Moreland தெரிவித்தார்.

Related posts

குளிர்காலப் புயல் காரணமாக Torontoவில் 10 cm வரை பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

Saskatchewanனில் முன்னாள் வதிவிட பாடசாலைக்கு அருகில் நில குறிப்புகள் ஏதுமற்ற 751 கல்லறைகள்!

Gaya Raja

Ontarioவில் COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 சதவீதம் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment