கடந்த வருடத்தின் முதல் பாதியில் வாரத்திற்கு ஐந்துக்கும் மேற்பட்ட வீடற்றோர் மரணங்கள் Torontoவில் பதிவாகியது.
2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வீடற்ற நிலையை எதிர் கொள்பவர்களிடையே சராசரியாக ஐந்துக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளன.
Toronto பொது சுகாதார பிரிவு (TPH) இந்த தரவை அறிவித்தது.
2024 ஆண்டு January 1 முதல் June 30 வரை மரணங்களின் எண்ணிக்கை 135 என புதிதாக வெளியிடப்பட்ட தரவுகள் சுட்டிக் காட்டுகிறது.
இது 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களை விட ஐந்து அதிகரித்த மரணங்களாகும் என் Ontario பிரேத பரிசோதகர் அலுவலகம் தெரிவித்தது.
ஆனால் 2022 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தை விட இது 20 குறைவான மரணங்களாகும் என கூறப்படுகிறது.
Toronto நகரம் 2022 இல் 189 வீடற்றோர் மரணங்களையும், 2023 இல் 150 வீடற்றோர் மரணங்களையும் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.