கனடிய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகள் 30 நாட்களாக தாமதப்படும் என்ற அறிவிப்பு குறித்து Conservative கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கனடாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நாம் அவசரமாக செயல்பட வேண்டும் என Conservative தலைவர் Pierre Poilievre கூறினார்.
இந்த வரி கட்டணங்கள் மீண்டும் ஒருபோதும் கொண்டு வரப்படாது என்பதை உறுதிப்படுத்த நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற அமர்வுகளை மீண்டும் அழைக்க, Pierre Poilievre ஆளும் Liberal கட்சிக்கு சவால் விடுத்தார்.
வரிவிதிப்பு தாமதம் இந்த செய்தியை NDP தலைவர் Jagmeet Singh வரவேற்றார்.
எமது பொருளாதாரம் நம்பகத்தன்மையற்ற கூட்டாளிகளை சார்ந்திருக்கும் நிலையை குறைக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.