கனடிய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகள் 30 நாட்களாக தாமதப்படுத்தப்பட்டுள்ளன.
கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி Donald Trump உத்தரவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக Justin Trudeau 30 பில்லியன் அமெரிக்க பொருட்கள் மீது வரி விதிப்புகள் அறிவித்தார்.
இந்த வரிகள் செவ்வாய்க்கிழமை (04) முதல் நடைமுறைக்கு வர இருந்தன.
ஆனாலும் இந்த வரிகளை 30 நாட்களுக்கு தாமதப்படுத்த இரு நாட்டுத் தலைவர்களும் இணங்கினர்.
திங்கட்கிழமை (03) இரு நாட்டின் தலைவர்களும் இரண்டு முறை தொலைபேசியில் உரையாடினார்.
திங்கள் மாலை நிகழ்ந்த உரையாடலின் பின்னர் வரி விதிப்பு தாமதப்படுத்தும் அறிவித்தலை Justin Trudeau வெளியிட்டார்.
இதன் மூலம் கனடாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தகப் போரைத் தற்காலிகமாக தவிர்த்துள்ளனர்.