கனடிய மத்திய வங்கி இந்த வாரம் தொடர்ந்து ஆறாவது வட்டி விகிதக் குறைப்பை அறிவிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கனடிய மத்திய வங்கி அதன் முக்கிய கொள்கை விகிதத்தை புதன்கிழமை கால் சதவீத புள்ளியால் குறைக்க கூடும் என பொருளாதார கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சமீபத்திய பணவீக்கம், வேலைவாய்ப்பு தரவுகளின் அடிப்படையில் இந்த வட்டி விகித குறைப்பு எதிர்வு கூறப்படுகிறது.
இதன் மூலம் வட்டி விகிதம் மூன்று சதவீதமாக குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வட்டி விகித குறைப்பு, மத்திய வங்கியின் முந்தைய இரண்டு வெட்டுக்களில் இருந்து ஒரு குறித்த நிலையை குறிக்கிறது.
October, December மாதங்களில் அதன் முக்கிய வட்டி விகிதத்தை கனடிய மத்திய வங்கி அரை சதவீதத்தால் குறைத்தது.
கனடிய மத்திய வங்கி கடந்த June மாதத்திலிருந்து தொடர்ந்து ஐந்து முறை அதன் முக்கிய வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.
ஆனால் வட்டி விகிதத்தின் குறைப்பின் வேகத்தை மத்திய வங்கி குறைக்கும் என கடந்த மாதம் கனடிய மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.