கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எதிரான வரி விதிப்புக்கும் வர்த்தக பேச்சுவார்த்தைக்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்தார்.
கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு எதிராக வரி விதிக்கும் தனது அச்சுறுத்தல் முன்கூட்டிய வர்த்தக மறு பேச்சுவார்த்தைகளை கட்டாயப்படுத்தும் முயற்சி அல்ல என அமெரிக்க ஜனாதிபதி செவ்வாய்க்கிழமை (21) கூறினார்.
கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு February 1 முதல் வரி விதிக்கப்படும் என Donald Trump தெரிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பின் மூலம் கனடா-அமெரிக்கா-மெக்சிகோ ஒப்பந்தம் (CUSMA) குறித்த பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதே Donald Trumpபின் தந்திரோபாயம் என Wall Street Journal செய்தி வெளியிட்டது.
ஆனாலும் 25 சதவீத வரிகள் விதிக்கப்படும் என்ற தனது அச்சுறுத்தல் CUSMAவுடன் “எந்த வகையிலும் தொடர்பு படவில்லை” என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு நிகழும் மனித, போதைப்பொருள் கடத்தல் இந்த வரி விதிப்பு அச்சுறுத்தலுடன் தொடர்புடையது எனவும் Donald Trump குறிப்பிட்டார்.