கனடிய மத்திய அரசின் அமைச்சர்கள் திங்கட்கிழமை (20) Quebec மாகாணத்தில் கூடுகின்றனர்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump திங்களன்று பதவி ஏற்கும் நிலையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் அனைத்து கனடிய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை விதிக்க Donald Trump எச்சரித்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் அதற்கு பதிலளிக்க கனடிய மத்திய அரசு பல திட்டங்களை தயாரித்துள்ளது.
Donald Trump அரசாங்கத்தின் நகர்வுகள் கனடிய அரசின் பதில் நடவடிக்கையை தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் கனடா-அமெரிக்கா நாடுகளின் உறவுகள் தொடர்பான புதிதாக அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவின் கூட்டத்தை பிரதமர் Justin Trudeau வெள்ளிக்கிழமை (17) கூட்டினார்.
இந்த ஆலோசனைக் குழுவில் முன்னாள் மாகாண முதல்வர்கள், தொழிற் கட்சி தலைவர்கள் வாகன தொழில் துறையின் பிரதிநிதிகளும் அடங்குவர்.
அமெரிக்காவுக்கு எதிரான சாத்தியமான பதிலடி நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க பிரதமர் கடந்த புதன்கிழமை 13 மாகாண முதல்வர்களை சந்தித்தார்.
இம்முறை அமெரிக்க ஜனாதிபதி பதவி ஏற்பில் கனடிய பிரதமர் கலந்து கொள்ள மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.