கனடாவை குறிவைப்பதன் மூலம் Donald Trump தவறான இலக்கைத் தேர்ந்தெடுத்துள்ளார் என Quebec முதல்வர் தெரிவித்தார்.
கனடாவை கடுமையான வரிகளுடன் அச்சுறுத்துவது மூலம் தவறான இலக்கை அமெரிக்க ஜனாதிபதி தேர்ந்தெடுக்கிறார் என Francois Legault கூறுகிறார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald Trump திங்கட்கிழமை (20) பதவி ஏற்கிறார்.
பதவி ஏற்றவுடன் அனைத்து கனடிய இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரியை விதிக்க அவர் எச்சரித்து வருகின்றார்.
வரி விதிக்கும் ஜனாதிபதியின் இந்த முன்மொழிவு அமெரிக்காவுக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என Francois Legault தெரிவித்தார்.
எங்கள் பொருளாதாரங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன என Quebec முதல்வர் கூறினார்.