Richmond Hill இந்து ஆலயத்தில் நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பிரதமர் Justin Trudeau கலந்து கொண்டார்.
தமிழ் மரபுரிமை மாதத்தை முன்னிட்டு தமிழ் கனடியர்கள் வெள்ளிக்கிழமை (17) மாலை Richmond Hill இந்து ஆலயத்தில் ஒன்று கூடினர்.
அங்கு நடைபெற்ற வழிபாட்டில் பிரதமர் கலந்து கொண்டார்.
தமிழ் மரபுத் திங்கள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற Justin Trudeau ஆலயத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றார் என Richmond Hill இந்து ஆலயம் தெரிவித்தது.
அமைச்சர்கள் கரி ஆனந்தசங்கரி, Marci Ien ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.