Scarborough வடக்கு தொகுதியின் Ontario NDP வேட்பாளராக தமிழரான தட்ஷா நவநீதன் நியமிக்கப்படவுள்ளார்.
இந்த நியமன கூட்டம் January 23 வியாழக்கிழமை நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இதன் மூலம் அடுத்த மாகாண சபை தேர்தலில் Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ் பெண் வேட்பாளர் தட்ஷா நவநீதன் போட்டியிடவுள்ளார்.
இந்த நியமனக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக Ontario NDP தலைவர் Marit Stiles கலந்து கொள்கிறார்.
கடந்த வருடம் நடைபெற்ற Scarborough – Guildwood தொகுதியின் Ontario மாகாண சபை இடைத் தேர்தலில் தட்ஷா நவநீதன் போட்டியிட்டிருந்தார்.
இந்த இடைத் தேர்தலில் அவர் 4,041 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார்என்பது குறிப்பிடத்தக்கது.