தேசியம்
செய்திகள்

Conservative தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை: NDP நாடாளுமன்ற உறுப்பினர்

Justin Trudeau தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான Conservative தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என NDP நாடாளுமன்ற உறுப்பினர் Charlie Angus தெரிவித்தார்.
Conservative தலைவர் Pierre Poilievreரை அதிகாரத்தில் அமர்த்தும் வகையிலான எந்த முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்க போவதில்லை என அவர் கூறினார்.
January 27 அன்று நாடாளுமன்றம் கூடியவுடன் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அறிமுகப்படுத்துவதாக NDP தலைவர் Jagmeet Singh இந்த மாத ஆரம்பத்தில் அளித்த வாக்குறுதியுடன் Charlie Angusசின் நிலைப்பாடு முரண்படுகிறது.
அடுத்த  நாடாளுமன்ற சபை அமர்வில் தனது கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை முன்வைக்கும் என NDP தலைவர் Jagmeet Singh அண்மையில் கூறியிருந்தார்.

Related posts

வீட்டு வாடகை மீண்டும் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 13ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

COVID தொற்றின் கோடைகால  அலைக்குள் நுழைந்துள்ள Ontario!

Leave a Comment