கனடியர்கள் இருவருக்கு Hong Kong காவல்துறையினர் பிடியாணை பிறப்பித்துள்ளனர்.
வெளிநாடுகளில் வசிக்கும் ஆறு செயற்பாட்டாளர்களுக்கு Hong Kong காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட கைது உத்தரவு பிடியாணையில் இரண்டு கனடியர்கள் அடங்குகின்றனர்.
இவர்களின் கைது உத்தரவில் 1 மில்லியன் Hong Kong டாலர் வெகுமதியும் அடங்குகிறது.
இந்த ஆறு பேரும் தேசிய பாதுகாப்பு குற்றங்களுக்காக தேடப்படுபவர்கள் என குறிப்பிட்ட பிடியாணைகள் சுட்டிக் காட்டுகின்றன.