December 23, 2024
தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகளை மீண்டும் கூட்ட ஆளுநர் நாயகத்திற்கு கடிதம்

நாடாளுமன்ற அமர்வுகளை மீண்டும் கூட்டுமாறு Conservative தலைவர் Pierre Poilievre வலியுறுத்தினார்.

ஆளுநர் நாயகம் Mary Simonக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த கோரிக்கையை Pierre Poilievre முன்வைத்தார்.

நாடாளுமன்ற அமர்வுகளை மீண்டும் கூட்டி அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என அவர் கோரினார்.

இந்த கோரிக்கை அடங்கிய கடிதமொன்றை அவர் ஆளுநர் நாயகத்திற்கு எழுதியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (20) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தை மீண்டும் அழைத்து, ஒரு நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை நடத்த முடியும் என, உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரதமரிடம் தெரிவிக்க வேண்டும் என ஆளுநர் நாயகத்திடம் Pierre Poilievre வலியுறுத்தினார்.

பிரதமர் தனது அரசியலமைப்பு கடமையை புரிந்து கொள்வதை உறுதி செய்யும் வகையில் அவருடன் கலந்தாலோசிக்க ஆளுநர் நாயகத்திடம் அந்த கடிதம் கோருகிறது.

அரசாங்கத்திற்கு எதிரான “நம்பிக்கையில்லா தீர்மானத்தை” தனது கட்சி முன்வைக்கும் என NDP தலைவர் தெரிவித்த நிலையில் இந்த கோரிக்கையை Pierre Poilievre முன் வைத்தார்.

அடுத்த  நாடாளுமன்ற சபை அமர்வில் தனது கட்சியின் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படும் என Jagmeet Singh கூறினார்.

பிரதமர் Justin Trudeau பதவி விலக வேண்டும் என அழைப்பு விடுத்த சில நாட்களுக்குப் பின்னர் இந்த கருத்தை Jagmeet Singh முன்வைத்தார்.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கை இழந்துள்ள Conservative, Bloc Québécois, NDP நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒரு புதிய தலைவருக்கு அழுத்தம் கொடுக்கும் Liberal நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்தால், அது நாடாளுமன்ற உறுப்பினர்களில் 70 சதவீதமாகும் என Pierre Poilievre கூறினார்.

ஆனால் Conservative தலைவர் கோருவதை ஆளுநர் நாயகத்தல்  செய்ய முடியாது என ஒரு அரசியலமைப்பு நிபுணர் தெரிவித்துள்ளார்.

Related posts

Nova Scotia வெள்ளத்தில் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டனர்!

Lankathas Pathmanathan

ஸ்ரீலங்கா அரசாங்கத்திடமிருந்து தமிழ் கனடியர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம்: Justin Trudeau

Lankathas Pathmanathan

வருடாந்த பணவீக்க விகிதம் குறைந்தது!

Lankathas Pathmanathan

Leave a Comment