December 21, 2024
தேசியம்
செய்திகள்

இடைத் தேர்தலில் மீண்டும் தோல்வியடைந்த அரசாங்கம்

British Columbia மாகாணத்தின் Cloverdale – Langley City தொகுதியின் இடைத் தேர்தலில் Conservative கட்சி வெற்றி பெற்றது.

இதன் மூலம் Liberal கட்சியிடமிருந்து இந்த தொகுதியை Conservative கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இந்த தொகுதியின் Liberal நாடாளுமன்ற உறுப்பினர் John Aldag மாகாண தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது பதவியில் இருந்து விலகிய நிலையில் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.

திங்கட்கிழமை (16) நடைபெற்ற இந்த இடைத் தேர்தலில் Conservative வேட்பாளர் Tamara Jansen வெற்றி பெற்றார்.

இந்த இடைத் தேர்தலில் Tamara Jansen 14,979 வாக்குகள் பெற்றார்.

Liberal வேட்பாளர் Madison Fleischer 2,401, NDP வேட்பாளர் Vanessa Sharma 1,875 வாக்குகளை பெற்றனர்.

இந்தத் தொகுதியை Tamara Jansen 2019 முதல் 2021 வரை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

இந்த ஆண்டு நடந்த இடைத் தேர்தல்களில் ஆளும் Liberal கட்சி இழந்த மூன்றாவது தொகுதி இதுவாகும்.

இந்தத் தொகுதியில் 92,061 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

ஆனாலும் இந்த இடைத் தேர்தலில் 16 சதவீதமான வாக்குகள் மாத்திரம் பதிவாகின.

Related posts

கனேடிய செய்திகளை அதன் தளங்களில் இருந்து நீக்க Google முடிவு

Lankathas Pathmanathan

கடந்த மாதம் மட்டும் புதிதாக 2 இலட்சத்து 59 ஆயிரம் வேலை வாய்ப்புகள்!!

Gaya Raja

Doug Fordக்கு  எதிராக போராட்டம் நடத்திய  பெண் காவல்துறையினரால் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment