பிரதமர் பதவியில் இருந்து விலகுவது குறித்து பரிசீலிப்பதாக Justin Trudeau அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.
பெயர் வெளியிடாத தரவுகள் மூலம் இந்த தகவல் வெளியானது.
அமைச்சரவையில் இருந்து விலகுவதாக துணை பிரதமரும் நிதியமைச்சருமான Chrystia Freeland திங்கட்கிழமை (16) அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் திங்கள் காலை அமைச்சரவையை பிரதமர் சந்தித்தார்.
நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது குறித்து பிரதமர் பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
திங்கள் பிற்பகல் நாடாளுமன்றத்தில் உரையாற்றவும் பிரதமர் திட்டமிட்டுள்ளார்.