Canada Post ஊழியர்கள் விரைவில் வேலைக்குத் திரும்ப நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மத்திய தொழில் அமைச்சர் Steven MacKinnon இந்த கருத்தை தெரிவித்தார்.
Canada Post நிர்வாகத்திற்கும் அதன் தொழிற்சங்கத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் நிலையை மறுபரிசீலனை செய்யுமாறு தொழில்துறை உறவுகள் வாரியத்தை அவர் கோரியுள்ளார்.
தேவை என கருதினால், வேலை நிறுத்தம் செய்யும் ஊழியர்களை தொழில்துறை உறவுகள் வாரியம் வேலைக்குத் திரும்ப உத்தரவிடலாம் எனவும் அமைச்சர் கூறினார்.
Canada Post ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒரு மாத காலத்தை அண்மிக்கிறது.
நாடாளாவிய ரீதியில் 55,000க்கும் மேற்பட்ட Canada Post தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நாடு முழுவதும் அஞ்சல், பொதி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த வார ஆரம்பத்தில் Canada Post ஊழியர்கலின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கும் என நம்புவதாக தொழிலாளர் அமைச்சர் கூறினார்.
இரு தரைப்பு பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என நம்புவடாக தெரிவித்த அவர், அதனை தீர்மானிக்க வேண்டியது தொழில்துறை உறவுகள் வாரியத்தின் பொருப்பு எனவும் கூறினார்.