Canada Post ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒரு மாத காலத்தை அண்மிக்கிறது.
நாடாளாவிய ரீதியில் 55,000க்கும் மேற்பட்ட Canada Post தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Canada Post தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் கடந்த மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது.
இந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் Canada Post நிர்வாகம் கடந்த வெள்ளிக்கிழமை (06) முன்மொழிவுகளை சமர்ப்பித்தது.
இந்த முன்மொழிவுக்கு தனது திருத்தங்களை கனடிய தபால் ஊழியர் சங்கம் பகிர்ந்து கொண்டது.
இந்த முன்மொழிவுகள் இரு தரப்பினரையும் எந்தவித நெருக்கமான நிலைக்கும் கொண்டு வரவில்லை என Canada Post நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் மத்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தர் பேச்சுவார்த்தைகளை இடை நிறுத்திய பின்னர் இரு தரப்பினரும் முதல் முறையாக திங்கட்கிழமை (09) சந்தித்தனர்.
ஆனாலும் போராட்டம் ஒரு முடிவுக்கு வரும் சாத்தியக்கூறுகளை காணவில்லை என Canada Post நிர்வாகம் கூறுகிறது.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான விநியோகங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.