Paris நகருக்கான பயணத்தின் போது Quebec மாகாண முதல்வர், அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள Donald Trumpபை சந்தித்தார்.
Quebec மாகாண முதல்வர் François Legault, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள Donald Trump ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த வார இறுதியில் Paris நகரில் நடைபெற்றது.
Donald Trump உடனான சந்திப்பின் போது, கனடிய எல்லைக் கட்டுப்பாடு, கனடிய தயாரிப்புகள் மீதான கட்டணங்கள் குறித்து விவாதித்ததாக Quebec மாகாண முதல்வர் தெரிவித்தார்.
இந்த பயணத்தின் போது Ukrainian ஜனாதிபதி Volodymyr Zelenskyy, தொழிலதிபர் Elon Musk ஆகியோரையும் François Legault சந்தித்தார்.
Ukraineனுக்கு Quebec மாகாணத்தின் ஆதரவு எப்போதும் உள்ளது என Volodymyr Zelenskyy உடனான தனது சந்திப்பின் போது தெரிவித்ததாக Quebec முதல்வர் கூறினார்.
Quebec மாகாணம் ஆயிரக்கணக்கான Ukraine அகதிகளை வரவேற்றுள்ளது எனவும் அவர் கூறினார்.
Elon Musk உடனான சந்திப்பின் போது, சர்வதேச வர்த்தகம், மின்சார வாகனங்கள் உல் ல் ட விடயங்கள் குறித்து விவாதித்த தெரிவித்தார்.