இந்து ஆலயத்தில் நிகழ்ந்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் கண்டனம் தெரிவித்தார்.
Brampton நகரில் உள்ள இந்து சபா ஆலயத்தின் முன்பாக போராட்டம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (03) முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக இரு குழுவினருக்கு இடையே வன்முறைத் தாக்குதல் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் கனடிய அரசாங்கம் நீதியை உறுதி செய்து சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாக பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை (04) கூறினார்.
கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை மிரட்டும் முயற்சிகள் “பயங்கரமானவை” எனவும் ஒரு சமூக ஊடக பதிவில் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் தாக்குதல் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.