தேசியம்
செய்திகள்

ஸ்ரீலங்கா புதிய ஜனாதிபதி – இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஸ்ரீலங்காவின் புதிய ஜனாதிபதியை இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் சந்தித்தார்.

புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவை இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் Eric Walsh புதன்கிழமை (02) சந்தித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அனுர குமார திசாநாயக்கவின் வெற்றிக்கு  கனடிய அரசாங்கத்தினதும் மக்களினதும் வாழ்த்துகளை இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் செயல்முறைக்கும், கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கும் கனடிய அரசாங்கத்தின் முழு ஆதரவையும் இந்த சந்திப்பில் Eric Walsh வெளிப்படுத்தினார்.

ஊழலுக்கு எதிராக போராடுவதற்கும், நாட்டில் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதற்கும் புதிய ஜனாதிபதியின் அர்ப்பணிப்புக்கு இந்த சந்திப்பில்  Eric Walsh பாராட்டு தெரிவித்தார்.

Related posts

தேசியத்தின் ஆசன பகிர்வு கணிப்பு (August 17 – செவ்வாய் )

Gaya Raja

நம்பகமான பயணிகள் திட்டத்தை மத்திய அரசு மறுசீரமைகிறது!

Lankathas Pathmanathan

பிரதமரை பதவி விலகுமாறு கோரவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

Lankathas Pathmanathan

Leave a Comment