தேசியம்
செய்திகள்

இரண்டாவது இடைத் தேர்தல் தோல்வியை எதிர்கொண்ட பிரதமர்

சில மாதங்களில் இரண்டாவது இடைத்தேர்தல் தோல்வியை பிரதமர் Justin Trudeau எதிர்கொண்டார்.

திங்கட்கிழமை (17) நடைபெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் Liberal கட்சி வெற்றி எதையும் பெறவில்லை.

தற்போதைய சிறுபான்மை நாடாளுமன்றத்தில் அதிகார சமநிலையை வைத்திருக்கும் கட்சிகள் இந்த இடைத்தேர்தலில் தலா ஒரு ஆசனங்களை வெற்றி பெற்றது.

Quebec மாகாணத்தின் LaSalle – Émard – Verdun தொகுதியை நீண்ட காலமாக Liberal  கட்சி பிரதிநிதித்துவப்படுத்தியது.

திங்கள் நடைபெற்ற இடைத்தேர்தலில் Quebec மாகாணத்தின் LaSalle – Émard – Verdun தொகுதியை Bloc Québécois கட்சி வெற்றி பெற்றது.

இந்தத் தொகுதியின் இடைத்தேர்தல் பிரதமரின் தலைமைக்கான வாக்கெடுப்பாக நோக்கப்பட்டது.

அதேவேளை Manitoba மாகாணத்தின் Elmwood – Transcona தொகுதியை NDP வெற்றி பெற்றது.

இவற்றில் LaSalle – Émard – Verdun தொகுதியின் தோல்வி Liberal அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது.

கோடை கால ஆரம்பத்தில் நடைபெற்ற மற்றொரு இடைத் தேர்தலில் Liberal கட்சியின்  நீண்டகால கோட்டையாக இருந்த St. Paul தொகுதியை Conservative கட்சி வெற்றி பெற்றது.

இது Justin Trudeau தலைமையிலான Liberal அரசாங்கத்திற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

தற்போது  இரண்டாவது கோட்டையாக கருதப்படும் LaSalle – Émard – Verdun தொகுதியை இழந்த பின்னர் Justin Trudeau அமைச்சாரவையை சந்திக்கிறார்.

Related posts

உலகளாவிய போதைப்பொருள் விநியோக திட்டத்தில் கனடியருக்கு சிறைத் தண்டனை

Lankathas Pathmanathan

கனடிய தமிழர் பேரவைக்கு எதிராக தொடரும் அதிருப்தி!

Lankathas Pathmanathan

இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் பணி செய்யவும் பயணிக்கவும் புதிய திட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment