தேசியம்
செய்திகள்

விரைவில் தேர்தல்? – இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்

இலையுதிர் கால நாடாளுமன்ற அமர்வுகள் திங்கட்கிழமை (16) ஆரம்பமாகிறது.

கோடை விடுமுறையை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளில் கலந்து கொள்கின்றனர்.

பிரதமர் Justin Trudeau, Conservative தலைவர் Pierre Poilievreரிடமிருந்து தொடர்ச்சியான தேர்தல் அழுத்தத்தை எதிர்கொள்ளும் நிலையில் நாடளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிக்கின்றன.

இந்த அமர்வில் தனக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பதில் Liberal அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடவுள்ளதாக Pierre Poilievre தெடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

Liberal அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பில் உதவ ஏனைய எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்து வருகிறார் .

அரசாங்கத்துடன் செய்து கொண்ட நம்பிக்கை ஒப்பந்தத்தில் இருந்து NDP அண்மையில் விலகிய நிலையில் இந்த அமர்வு முக்கியத்துவம் பெறுகிறது.

சிறுபான்மை Liberal அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு, NDP,  Bloc Québécois கட்சிகளின் ஆதரவு Conservative கட்சிக்கு தேவை என்பது குறிப்பிட்தக்கது.

ஆனாலும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது குறித்த எந்த உறுதிப்பாட்டையும் Jagmeeet Singh வெளியிடவில்லை.

நம்பிக்கை வாக்கெடுப்பின் போது Liberal அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து சாதகமான கருத்துக்களை அண்மையில் Bloc Québécois வெளியிட்டு வருகிறது.

Liberal அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு ஈடாக Quebec மாகாணத்திற்கு தேவையான ஆதாயங்களைப் பெற தயாராக உள்ளதாக Bloc Québécois கூறியுள்ளது.

Conservative  கட்சி 119 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது.

Justin Trudeauவின் 154 நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரசாங்கத்தை பதவி விலத்துவதற்கு அவர்களுக்கு 24 நாடாளுமன்ற  உறுப்பினர்களின் ஆதரவு நம்பிக்கை வாக்கெடுப்பில் தேவையாகிறது.

NDP ஆதரவு குறித்து கேள்வி எழுந்துள்ள நிலையில், 32 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் Bloc Québécois  அதிகார சமநிலையை கொண்டுள்ளது.

Related posts

சுகாதார பாதுகாப்பு நிதி உதவி குறித்த முதல்வர்கள் சந்திப்பு தாமதம்

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி பாவனை ஒப்புதல் மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்படவுள்ளது

Lankathas Pathmanathan

பெரும்பாலான P.E.I குடியிருப்பாளர்கள் தொடர்ந்தும் மின்சாரம் இல்லாத நிலை

Lankathas Pathmanathan

Leave a Comment