December 12, 2024
தேசியம்
செய்திகள்

Pierre Poilievre வெற்றியை தடுக்க Justin Trudeau பதவி விலக வேண்டும்?

Pierre Poilievre தேர்தலில் வெற்றி பெறுவதைத் தடுக்க Justin Trudeau பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

LGBTQ+ ஆர்வலர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

மக்கள் ஆதரவு குறைந்து வரும் நிலையில், அடுத்த தேர்தல் வரை Liberal கட்சியின் தலைவராக நீடிக்க பிரதமர் Justin Trudeau எடுத்துள்ள நிலைப்பாடு தங்களை ஆபத்தில் ஆழ்த்துகிறது என LGBTQ+ ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Pierre Poilievre தலைமையிலான Conservative அரசாங்கம் LGBTQ+ சமூகத்திற்கு ஆபத்தானது என Queer ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

அடுத்த தேர்தலில் Liberal கட்சி வெற்றி பெற ஒரு சிறந்த வாய்ப்பை வழங்க Justin Trudeau பதவி விலக வேண்டும் என அவர்கள்  அழைப்பு விடுக்கின்றனர்.

அடுத்த பொதுத் தேர்தல் October 20, 2025க்கு முன்னர் நடைபெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கு முகமூடிகள் தொடர்ந்தும் அவசியம்

Lankathas Pathmanathan

கனேடிய தமிழர்களுக்கு சமூக மையம் குறித்த முக்கிய அறிவித்தல்!

Gaya Raja

வார விடுமுறை முழுவதும் தொடரவுள்ள அவசரகாலச் சட்டம் மீதான விவாதம்

Lankathas Pathmanathan

Leave a Comment