December 12, 2024
தேசியம்
செய்திகள்

பிரதமர் Justin Trudeau மீது Liberal அமைச்சரவை நம்பிக்கை!

பிரதமர் Justin Trudeau மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக Liberal அமைச்சரவை தெரிவித்தது.

Justin Trudeau தலைமையிலான Liberal அரசாங்கத்தின் மூன்று நாள் அமைச்சரவை சந்திப்பு Novo Scotia மாகாணத்தின் Halifax நகரில் நடைபெறுகிறது.

நடைபெறவுள்ள இலைதுளிர் கால நாடாளுமன்ற கூட்டத்திற்கு தயாராகும் வகையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.

எங்கள் அரசாங்கத்தின் தலைவராகவும், கனடாவின் பிரதமராகவும், எங்கள் கட்சியின் தலைவராக அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என துணைப் பிரதமர் Chrystia Freeland கூறினார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக Liberal கட்சி, Conservative கட்சியை விட மக்கள் கருத்து வாக்கெடுப்பில் பின்தங்கி உள்ளது.

இந்த அமைச்சரவை சந்திப்பின் போது பிரதமர் தனது அமைச்சரவையை மாற்றக்கூடும் என்ற ஊகங்கள் வெளியாகியிருந்தன.

Related posts

கலைக்கப்படும் Peel பிராந்தியம்?

Lankathas Pathmanathan

குறைவடையும் வேலையற்றோர் விகிதம்!

opioids காரணமாக கடந்த வருடம் நாளாந்தம் 17 பேர் மரணம்!

Gaya Raja

Leave a Comment