தேசியம்
செய்திகள்

புதிய அரசியல் கட்சி ஆரம்பம்!

கனடிய எதிர்கால கட்சி – Canadian Future Party – என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

New Brunswick சுயேட்சை மாகாணசபை உறுப்பினர் Dominic Cardy இந்த புதிய அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தார்.

கட்சியின் இடைக்காலத் தலைவராக Dominic Cardy செயல்படவுள்ளார்.

ஏமாற்றமடைந்த Liberal, Conservative கட்சி  வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவது இந்த புதிய கட்சியின் நோக்கம் என Dominic Cardy கூறினார்.

இந்த கட்சியின் ஆரம்பத்தை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு புதன்கிழமை (14) தலைநகர் Ottawaவில் நடைபெற்றது

கனடிய எதிர்கால கட்சியை தகுதியான அரசியல் கட்சியாக July 22ஆம் திகதி கனடிய தேர்தல் திணைக்களம் அங்கீகரித்தது

August 8 ஆம் திகதி இந்தக் கட்சி அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது.

September மாதம் நடைபெறவுள்ள Winnipeg, Montreal இடைத் தேர்தலில் கனடிய எதிர்கால கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

Related posts

மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த கனடாவின் பணவீக்கம்

Lankathas Pathmanathan

கனடிய அணியை வழி நடத்தத் தேர்வானவர்கள் யார்?

Lankathas Pathmanathan

Quebec மாகாணம் மீண்டும் அறிமுகப்படுத்தும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு

Lankathas Pathmanathan

Leave a Comment