தேசியம்
செய்திகள்

கனடிய சுற்றுலாப் பயணியின் மரணம் கொடூரமானது: அயர்லாந்து பிரதமர்

கனடிய சுற்றுலாப் பயணி ஒருவர் தாக்கப்பட்டு பலியான சம்பவம் குறித்து அயர்லாந்து பிரதமர் அதிர்ச்சி தெரிவித்தார்.

Montreal நகரைச் சேர்ந்த கனடியரான Neno Dolmajian அயர்லாந்தில் மரணமடைந்துள்ளார்.

அயர்லாந்தின் தலைநகரம் Dublinனில் அவர் தாக்கப்பட்டதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் குறித்து அயர்லாந்து பிரதமர் Simon Harris அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

இந்த மரணம் கண்டிக்கத்தக்கது, கொடூரமானது என அவர் விவரித்தார்.

மேலும் இந்த மரணம் தற்போது கொலையாக விசாரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் புதன்கிழமை (03) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் Mary Lou McDonald இந்த மரணத்தை கண்டித்தார்.

June மாதம் 23ஆம் திகதி தாக்கப்பட்ட கனடியர் ஒரு வாரத்தின் பின்னர் சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் மரணமடைந்தார்.

41 வயதான Neno Dolmajian மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அயர்லாந்தின் தேசிய காவல்துறை செவ்வாய்கிழமை (02) உறுதிப்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

24 வயதான Ionut Danca, 23 வயதான Madalin Ghiuzan ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும் பிணை மறுக்கப்பட்டு தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கனடிய சுற்றுலாப் பயணி ஒருவர் அயர்லாந்தில் தாக்கப்பட்டு பலியானதை கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியது.

Related posts

Ontario அரசிற்கும், கனடிய மத்திய அரசிற்கும் இடையில் குழந்தை பராமரிப்பு ஒப்பந்தம்

Lankathas Pathmanathan

83 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் Ontarioவில் தடுப்பூசியை பெற்றனர்!

Gaya Raja

6 இலட்சத்தி 40 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகளை இந்த வாரம் மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன: அமைச்சர் தகவல்

Lankathas Pathmanathan

Leave a Comment