Scarborough நகரில் நெடுஞ்சாலை 401 இல் ஏழு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர்.
வியாழக்கிழமை (20) நிகழ்ந்த இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மேலும் இருவர் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக Toronto காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்துக்கான காரணத்தை அறியும் வகையில் விசாரணைகள் தொடர்வதாக Ontario மாகாண காவல்துறை தெரிவித்தது.