தேசியம்
செய்திகள்

Mississauga நகர முதல்வரானார் Carolyn Parrish

Mississauga நகர முதல்வராக Carolyn Parrish தெரிவு செய்யப்பட்டார்.

Mississauga நகர முதல்வர் இடைத் தேர்தலில் வாக்களிப்பு திங்கட்கிழமை (10) நடைபெற்றது.

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற 77 வயதான Carolyn Parrish, Mississauga நகரின் ஏழாவது நகர முதல்வராக பதவி ஏற்பார்.

Mississauga குடியிருப்பாளர்கள் 1978 முதல் மூன்றாவது நகர முதல்வரை தேர்ந்தெடுத்துள்ளனர்.

நகர முதல்வர் இடைத் தேர்தலில் Carolyn Parrish  43,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Mississauga நகரின் முதல்வருக்கான பதவிக்கு 16 பேர் போட்டியிட்டனர்.

Carolyn Parrish, 2006 இல் நகரசபை அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கு முன்னர் அவர் 13 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயல் பட்டவராவார்.

Mississauga நகரின் ஆறாவது நகர முதல்வராக Bonnie Crombie 2014 முதல் 2024 வரை 10 ஆண்டுகள் சேவையாற்றினார்.

Ontario மாகாண Liberal கட்சி தலைவர் பதவியை வெற்றியடைந்த நிலையில் Mississauga நகர முதல்வர் பதவியில் இருந்து Bonnie Crombie விலகியிருந்தார்.

புதிய நகர முதல்வர் Carolyn Parrishக்கு முன்னாள் Mississauga நகர முதல்வர் Bonnie Crombie வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Ontario முதல்வர் Doug Ford, Toronto நகர முதல்வர் Olivia Chow உட்பட பலரும் Carolyn Parrishக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related posts

கொலை குற்றச்சாட்டில் கனடா முழுவதும் தேடப்படும் தமிழர்

Lankathas Pathmanathan

Ottawaவில் போராட்டங்களில் குடியிருப்பாளர்கள் பாதிப்பு குறித்து சாட்சியம்

Lankathas Pathmanathan

வெள்ளிக்கிழமை எரிபொருளின் விலை மூன்று சதம் சரியும்

Lankathas Pathmanathan

Leave a Comment