December 12, 2024
தேசியம்
செய்திகள்

ATV விபத்தில்  ஒரு குழந்தை மரணம் – மூவர் காயம்

ATV விபத்தில்  ஒரு குழந்தை மரணமடைந்து, மற்றொரு குழந்தை உட்பட மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

திங்கட்கிழமை (27) Novo Scotia மாகாணத்தின் Forties சமூகத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது.

நான்கு பயணிகளில், ஒரு குழந்தை உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்தக் குழந்தை சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் மரணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாகனம் ஓட்டியான 27 வயதுடைய பெண், 52 வயதுடைய ஆண் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் மற்றொரு குழந்தைக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த விபத்துக்கு மதுபோதை ஒரு காரணியாக இருக்கலாம் என Nova Scotia RCMP தெரிவித்தது.

இந்த விபத்து குறித்த விசாரணை தொடரும் நிலையில் இதுவரை குற்றச் சாட்டுகள் எதுவும் பதிவாகவில்லை.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

மத்திய அரச ஊழியர்களுக்கு கட்டாயமாக்கப்படும் தடுப்பூசி!

Gaya Raja

Ontario COVID கட்டுப்பாடுகளை விரைவில் நீக்கவில்லை: முதல்வர் Ford

Lankathas Pathmanathan

Leave a Comment