தேசியம்
செய்திகள்

இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த தமிழர்

இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தமிழர் ஒருவர் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

Bradford West Gwillimbury நகரை சேர்ந்த இருபது வயதான ஜனார்த்தன் சிவரஞ்சன் என்பவர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

2023 ஆம் ஆண்டில் நிகழ்ந்த தொடர்ச்சியான சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது.

York பிராந்திய காவல்துறை செவ்வாய்க்கிழமை (21) வெளியிட்ட அறிக்கையில் இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விபரங்கள் வெளியாகின.

18 வயதுக்கு குறைந்தவர் போல் தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு இரண்டு சிறுமிகளை அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

இவரினால் மேலும் சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் காவல்துறையினர் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

மத்திய, மாகாண சுகாதார அமைச்சர்கள் பேச்சுவார்த்தை உடன்பாடு இல்லாமல் முடிவு

Lankathas Pathmanathan

கனடாவுக்கான பயணத்தை இரத்து செய்யுமாறு வெளியான அறிவுறுத்தல் தவறானது

Gaya Raja

RCMP அதிகாரிகளால் சுடப்பட்ட 27 வயது இளைஞன் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment