கனடாவின் வருடாந்த பணவீக்கம் March மாதத்தில் 2.9 சதவீதமாக அதிகரித்துள்ளது
February மாதத்துடன் ஒப்பிடும்போது March மாதத்தில் வருடாந்த பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளதாக கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்தது.
எரிபொருள் விலை உயர்வால் இந்த அதிகரிப்பு நிகழ்ந்துள்ளது.
March மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீடு கடந்த ஆண்டை விடவும் 2.9 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகிறது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் எரிபொருள் விலை 4.5 சதவீதம் உயர்ந்துள்ளதால் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.
எரிபொருளை தவிர்த்து, February மாதம் 2.9 சதவீதமாக இருந்த வருடாந்த பணவீக்கம் March மாதத்தில் 2.8 சதவீதமாக அதிகரித்துள்ளது என் புள்ளிவிவரத் திணைக்களம் கூறுகிறது.