தேசியம்
செய்திகள்

மத்திய அரசின் 2024ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம்

கனடாவின் நிதியமைச்சர் Chrystia Freeland, செவ்வாய்க்கிழமை (16) மத்திய அரசின் 2024ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்கிறார்.

Justin Trudeau அரசாங்கம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட புதிய செலவினங்களில் 40 பில்லியன் டொலர்களை எவ்வாறு சமப்படுத்த விரும்புகிறது என்பதை இந்த வரவு செலவுத் திட்டத்தில் வெளிப்படுத்துகிறது.

கனடாவின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதில் ஒருங்கிணைந்த கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு மத்தியில் இந்த வரவு செலவுத் திட்டம் சமர்பிக்கப்படுகிறது.

அதிக வீடுகளை விரைவாகக் கட்டுதல், வாழ்க்கை செலவீனங்களை கட்டுப்படுத்துதல், புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் இந்த வரவு செலவுத் திட்டம் கவனம் செலுத்தும் என துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland கூறினார்.

மத்திய அரசாங்கம் மந்தமான பொருளாதாரத்தை எதிர்கொள்கிறது.

அவசர முதலீடு தேவைப்படும் முக்கியமான தருணத்தில் நாடு உள்ளது என பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்

இந்த நிலையில் வெளியாகும் வரவு செலவுத் திட்டம் கனடாவின் வீட்டு நெருக்கடியில் தாக்கத்தை ஏற்படுத்தவும், புதிய வாக்காளர்களை கவரவும் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

2008ஆம் ஆண்டின் பின்னர் ஒரு முறை மட்டுமே சமநிலை படுத்தப்பட்ட மத்திய வரவு செலவு சமர்ப்பிக்கப்பட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

குற்றச்சாட்டுகளை மறுக்கும் Hockey கனடா

Lankathas Pathmanathan

வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட அச்சுறுத்தல்: Torontoவில் தமிழ் பெண் வழக்கறிஞர் கைது!

Gaya Raja

Ontario Liberal கட்சியின் தலைமை பதவிக்கு நான்காவது வேட்பாளர்

Lankathas Pathmanathan

Leave a Comment