Alberta மாகாண Medicine Hat நகர முதல்வர் பதவிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டது.
நகர முதல்வர் Linnsie Clarkகின் பதவிக்கான அதிகாரங்களை குறைக்கும் முடிவு வியாழக்கிழமை நடைபெற்ற நகர சபை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
நகர முதல்வர் Linnsie Clark, ஒரு நகரசபை உறுப்பினர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
நகர முதல்வரின் அதிகாரங்களையும் ஊதியத்தையும் குறைப்பதற்கான வாக்கெடுப்பில் கலந்து கொண்ட நகர சபை உறுப்பினர்களிடையே ஏக மனதாக இருந்தது.
நகர மேலாளரை கண்ணியமாக நடத்த தவறியதன் மூலம் Linnsie Clark நடத்தை விதிகளை மீறியதாக ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் விளைவாக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.