December 21, 2024
தேசியம்
செய்திகள்

கனடிய தேசிய மல்யுத்தத்தில் தங்கம் வென்ற தமிழ் கனடிய உடன்பிறப்புகள்!

தமிழ் கனடிய உடன்பிறப்புகள் 2024ஆம் ஆண்டுக்கான கனடிய தேசிய மல்யுத்த வெற்றியாளர்களாக – Canadian National Wrestling Champions – முடி சூட்டப்பட்டனர்.

கனடிய தேசிய மல்யுத்த தொடர் வியாழக்கிழமை (14) ஆரம்பமானது.

இதில் Ontario மாகாணத்தின் Pickering நகரை சேர்ந்த ஆகரன் பிரணவன், அட்சயா பிரணவன் ஆகியோர் தேசிய ரீதியில் வெற்றியாளர்களாக முடி சூட்டப்பட்டனர்.

17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் இந்த வெற்றியை அவர்கள் பெற்றனர்.

கடந்த வாரம் நடைபெற்ற தேசிய ரீதியிலான போட்டியில் இவர்கள் இருவரும் தங்கப் பதக்கத்தை வென்றனர்.

உயர்நிலைப் பாடசாலை மாணவர்களான இவர்கள், Durham மல்யுத்த குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.

அட்சயா பிரணவன் 49 kg பிரிவிலும், ஆகரன் பிரணவன் 51 kg பிரிவிலும் போட்டியிடுகின்றனர்.

15 வயதான ஆகரன் பிரணவன், 3 முறை Pan American grappling வெற்றியாளராவார்.

அட்சயா பிரணவன்  2023 இல் தேசிய ரீதியில் வெள்ளிப் பதக்கம் வென்றவராவார்.

இவர்களின் பெற்றோர்களான பிரணவன் நந்தீஸ்வரர்,  ஜபாலினி பிரணவன் இலங்கையிலிருந்து கனடா புலம்பெயர்ந்தவர்களாவார்கள்.

Related posts

மீண்டும் வட்டி விகித அதிகரிப்பை அறிவிக்கவுள்ள மத்திய வங்கி!

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் May மாதம் 7ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்ற கனடா அனைத்து முயற்சிகளையும் கையிலெடுக்கும்: அமைச்சர் Mendicino!

Gaya Raja

Leave a Comment