December 21, 2024
தேசியம்
செய்திகள்

N.L. முதல்வர் அரசியல் அழுத்தத்திற்கு அடி பணிந்துள்ளார்?

Carbon வரி உயர்வு விடயத்தில் Newfoundland and Labrador முதல்வர் அரசியல் அழுத்தத்திற்கு பணிந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் Justin Trudeau இந்த கருத்தை தெரிவித்தார்.

Carbon வரியை தாமதப்படுத்த அழைப்பு விடுத்திருப்பது முதல்வர் Andrew Furey அரசியல் அழுத்தத்திற்கு அடிபணிந்திருப்பதற்கான அறிகுறியாகும் என பிரதமர் கூறினார்.

Carbon வரி அதிகரிப்பை தாமதப்படுத்த Liberal கட்சியின் Newfoundland and Labrador முதல்வர் Andrew Furey  இந்த வாரம் அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள கனடியர்கள் தங்கள் அரசாங்கங்கள் சரியானதைச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் என Justin Trudeau கூறினார்.

இந்த விடயத்தில்  Justin Trudeau மாகாணங்கள், பிரதேசங்களில் இருந்து தொடர் அழுத்தத்தை எதிர் கொள்கின்றார்.

ஏற்கனவே New Brunswick, Prince Edward Island, Saskatchewan, Alberta, Ontario, Nova Scotia ஆகிய மாகாண முதல்வர்கள் அனைவரும் Carbon வரி அதிகரிப்பை இடைநிறுத்த அல்லது இரத்து செய்யுமாறு Justin Trudeaவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

Carbon வரி அதிகரிப்பை வலுவாக ஆதரிப்பதாக Yukon Liberal முதல்வர் Premier Ranj Pillai புதன்கிழமை (13) கூறினார்.

Related posts

கனடா – இங்கிலாந்து வர்த்தக பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்

Lankathas Pathmanathan

Trudeau அமைச்சரவையில் மாற்றம்

Lankathas Pathmanathan

25 சதவீதம் உயர்ந்தது கனடாவின் வீட்டின் விலை – அதிக விலை அதிகரிப்பை கொண்ட பகுதி என்ன தெரியுமா?

Gaya Raja

Leave a Comment