தேசியம்
செய்திகள்

இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த சந்தேக நபர் நீதிமன்றில்

தலைநகர் Ottawaவில் இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த சந்தேக நபர் வியாழக்கிழமை (14) மீண்டும் நீதிமன்றில் நிறுத்தப்படுகிறார்.

கடந்த வாரம் Ottawa புறநகர் பகுதியில் 6 பேரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 19 வயது இளைஞர் வியாழன் பிற்பகல் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றார்.

6 பேரை கொன்ற குற்றச் சாட்டில் Febrio De-Zoysa கடந்த வாரம் புதன்கிழமை (6) இரவு கைது செய்யப்பட்டார்.

அவர் மீது 6 முதல்தர கொலை வழக்குகள், ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

இதில் பலியானவர்கள் 35 வயதான தர்ஷனி பண்டாரநாயக்கா, 7 வயதான இனுக்கா விக்கிரமசிங்க, 4 வயதான அஷ்வினி விக்கிரமசிங்க, 2 வயதான றினாயனா விக்கிரமசிங்க, இரண்டரை மாத கெலி விக்கிரமசிங்க, 40 வயதான ஜீ காமினி அமரகோன் என அறிவிக்கப்பட்டது.

சர்வதேச மாணவராக கனடாவிற்கு வந்த Febrio De-Zoysa, இலங்கையிலிருந்து புதிதாக வந்திருந்த பலியானவர்களின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் பலியான தர்ஷனி பண்டாரநாயக்காவின் கணவரும் பிள்ளைகளின் தந்தையுமான தனுஷ்க விக்கிரமசிங்க கைகளிலும் முகத்திலும் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்புரவுப் பணியில் இருந்து தனுஷ்க விக்கிரமசிங்க வீட்டிற்கு வந்தபோது இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் “கத்தி போன்ற கூரிய ஆயுதத்தால்” தாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த கொலைகளுக்கான காரணத்தை அவர்கள் வெளியிடவில்லை.

குற்றவாளிக்கு எதிரான குற்றங்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகளை CRA வழங்குகிறது!

Lankathas Pathmanathan

Ontario Liberal கட்சியின் இடைக்காலத் தலைவராக John Fraser தெரிவு

Lankathas Pathmanathan

கனடாவில் ஆறாவது COVID அலை தவிர்க்க முடியாதது!

Lankathas Pathmanathan

Leave a Comment