மத்திய அரசின் குறைந்தபட்ச ஊதியம் அடுத்த மாதம் அதிகரிக்க உள்ளது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் மத்திய அரசு தனது தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அறிவித்தது.
65 சதத்தினால் குறைந்தபட்ச ஊதியத்தை அறிவிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் April 1 முதல் ஒரு மணி நேரத்திற்கு குறைந்தபட்ச ஊதியம் 17 டொலர் 30 சதமாக அதிகரிக்கிறது.
Justin Trudeau அரசாங்கம் பணவீக்கத்தை எதிர்கொள்ள ஆண்டுதோறும் மத்திய குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிப்பதாக அளித்த வாக்குறுதியின் ஒரு பகுதியாக இந்த உயர்வு அமைகிறது.
இந்த மாற்றம் மத்திய -ஒழுங்குபடுத்தப்பட்ட (federally-regulated) தொழில்களில் உள்ள தொழிலாளர்களை பாதிக்கிறது.