December 21, 2024
தேசியம்
செய்திகள்

Scarborough வீதி விபத்தில் ஒருவர் பலியானார் – ஒருவர் படுகாயம்!

Scarboroughவில் ஆறு வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார் – ஒருவர் படுகாயமடைந்தார்.

இந்த விபத்து குறித்து சிறப்பு புலனாய்வு பிரிவு – Special Investigations Unit (SIU) விசாரணையில் ஈடுபட்டுள்ளது.

புதன்கிழமை அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்தது.

Markham Road and Milner Avenue அருகில் காலை 6:30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

இதில் வாகனம் ஒன்று கவிழ்ந்து தீப்பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மூன்று பேரை வெளியேற்ற வேண்டிய நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனாலும் காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார் என காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

மரணம், கடுமையான காயம் அல்லது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை உள்ளடக்கிய  எந்தவொரு தொடர்புகளையும் விசாரிக்க அமைக்கப்பட்ட அமைப்பு SIU ஆகும்.

Related posts

கனடியப் பொருளாதாரத்தின் நிலை குறித்த அறிக்கை அடுத்த வாரம் வெளியாகும்

Lankathas Pathmanathan

COVID பரவலில் இருந்து பாதுகாப்பு – கனடாவில் புதிய கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan

இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிறுத்தத்தை வரவேற்கும் கனடா

Gaya Raja

Leave a Comment