தேசியம்
செய்திகள்

வாகனத் திருட்டை எதிர்கொள்ள $15 மில்லியன் நிதியுதவி

வாகனத் திருட்டை எதிர்கொள்ள கனடிய அரசாங்கம் 15 மில்லியன் டொலர் நிதியுதவியை அறிவித்துள்ளது.

அண்மைய காலத்தில் அதிகரித்து வரும் வாகன திருட்டை  எதிர்கொள்ள கனடிய அரசாங்கம் 15 மில்லியன் டொலர்களை நிதி உதவியாக அறிவித்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை (21) தெரிவித்தனர்.

பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic Leblanc நடத்திய செய்தியாளர் மாநாட்டில் இந்த அறிவித்தல் வெளியானது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் போக்குவரத்து அமைச்சர் Pablo Rodriguez, Montreal  காவல்துறை தலைவர் Fady Dagher, Montreal நகர முதல்வர் Mayor Valérie Plante, RCMP ஆணையர் Mike Duheme ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த தொகையில் 9.1 மில்லியன் டொலர் மாகாண, பிராந்திய, மாநகர காவல் சேவைகளுக்கு ஒதுக்கப்படும் என அமைச்சர் Dominic Leblanc சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளில் திருடப்படும் வாகனங்கள் குறித்த விசாரணைகளை மேம்படுத்த, மேலும் 3.5 மில்லியன் டொலர் INTERPOL  தகவல் பகிர்வுக்கு ஒதுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

அரசாங்கத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு பங்காளிகளுக்கு தொடர்ந்து உதவ 2.4 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்படுகிறது.

கனடாவில் இருந்து திருடப்பட்ட வாகனங்களை ஏற்றுமதி செய்வதை எதிர்த்து போராடுவதற்கு மத்திய அரசு  28 மில்லியன் டொலர் நிதி உதவியை February 7ஆம் திகதி அறிவித்தது.

கனடாவில் ஆண்டுக்கு 90,000 வாகனங்கள் திருடப்படுவதாக மத்திய அரசாங்கத்தின் தரவுகள் கூறுகிறது.

Related posts

ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் – கனடிய பிரதமர் சந்திப்பு!

Lankathas Pathmanathan

பொருளாதார எழுச்சியைத் தொடர்ந்து கனடா சிறந்த நிலையில் உள்ளது: IMF

Lankathas Pathmanathan

சூடான் மக்களுக்கு மனிதாபிமான விசா வழங்க கனடா முடிவு

Lankathas Pathmanathan

Leave a Comment