தேசியம்
செய்திகள்

Ontarioவில் 52 திருடப்பட்ட வாகனங்கள் மீட்பு

Ontarioவில் 52 திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டன.

இதனை அடுத்து 96 குற்றவியல் குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் பதிவு செய்தனர்

திருடப்பட்ட 3.2 மில்லியன் டொலருக்கு அதிகமான மதிப்புள்ள 52 வாகனங்கள் மீட்கப்பட்டதை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

York பிராந்திய காவல்துறை திங்கட்கிழமை இந்த தகவலை வெளியிட்டனர்.

Vaughan, Toronto, London, Cambridge, Bradford ஆகிய நகரங்களில் December 2023, January 2024 இல் ஆறு தேடல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதையடுத்து பதினொரு பேர் மீது காவல்துறையினர் 100 குற்றங்களை சுமத்தியுள்ளனர்.

உயர்தர வாகனங்களை, கிழக்கு ஐரோப்பாவில் உள்ள Azerbaijan, Georgia வரை கடத்த இந்த குழுவினர் திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.

Toronto பெரும்பாகம் முழுவதும் 2015 ஆம் ஆண்டு முதல் வாகன கடத்தல் சம்பவங்கள் 300 சதவீதம் அதிகரித்துள்ளன.

Related posts

வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு நீடிக்கப்படும்

Lankathas Pathmanathan

சூடானிய குடியிருப்பாளர்களுக்கு ஆதரவான நடவடிக்கைகளை அறிவித்த கனடா

COVID தொற்றின் இரண்டாம் ஆண்டில் Opioids காரணமாக நாளாந்தம் எட்டு மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment