தேசியம்
செய்திகள்

$6.5 மில்லியன் Cocaine கடத்திய குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் Brampton நபர்

Cocaine கடத்தியதாக Brampton நபர் மீது RCMP அதிகாரிகளினால் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் 35 வயதான Sukhwinder Dhanju என அடையாளம் காணப்பட்டார்.

கடந்த September 26 ஆம் திகதி Niagara-on-the-Lake எல்லை கடவை ஊடாக Cocaine போதைப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றை RCMP தடுத்து நிறுத்தியது.

இந்த போதைப் பொருட்களின் மதிப்பு சுமார் 6.5 மில்லியன் டொலர்கள் என அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

December 19 ஆம் திகதி சந்தேக நபர் மீது போதைப் பொருள் இறக்குமதி, கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

கடுமையான நிபந்தனைகளுடன் அவர் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அடுத்த மாதம் அவர் St. Catherines நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

புதிய துப்பாக்கிச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம்

Lankathas Pathmanathan

Ontarioவில் நிலவும் Pfizer தடுப்பூசியின் பற்றாக்குறை

Lankathas Pathmanathan

ஜெருசலேம் குண்டுவெடிப்பில் கனடிய இளைஞன் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment