தேசியம்
செய்திகள்

Cantaloupe salmonella பாதிப்பில் கனடாவில் ஆறு பேர் பலி

Cantaloupe salmonella பாதிப்பில் கனடாவில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்தது.

கனடாவின் பொது சுகாதார நிறுவனம் (PHAC) இந்த தகவலை உறுதிப்படுத்தியது.

Malichita, Rudy ரக Cantaloupe தொடர்புடைய salmonella பாதிப்புடன் தொடர்புடைய 153 உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக PHAC தெரிவிக்கின்றது.

உறுதிப்படுத்தப்பட்ட salmonella பாதிப்பு இதுவரை எட்டு மாகாணங்களிலும் பதிவாகியுள்ளது.

Quebec, Ontario, British Columbia, Newfoundland and Labrador, Prince Edward Island, British Columbia, Alberta,  New Brunswick, Nova Scotia ஆகிய எட்டு மாகாணங்களிலும் பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Quebec மாகாணத்தில் அதிக எண்ணிக்கையில் பாதிப்புகள் பதிவாகின.

Quebec மாகாணத்தில் மாத்திரம் 103 பாதிப்புகள் இதுவரை பதிவாகியுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலோர் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள், அல்லது 65 வயதுக்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என PHAC கூறுகிறது.

இதில் ஆறு வயதுக்கு உட்பட்டவர்கள் 35 சதவீதம் எனவும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 44 சதவீதம் எனவும் கூறப்படுகிறது.

இதில் 53  பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

Ontarioவில் ஜந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு COVID தடுப்பூசி முன்பதிவுகள் வியாழன் ஆரம்பம்

Lankathas Pathmanathan

நிதி விடயத்தில் பொறுப்புடன் இருக்க வேண்டும்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Nunavut பிராந்தியத்தின் Arviat சமூகத்தில் அவசரகால நிலை

Lankathas Pathmanathan

Leave a Comment