தேசியம்
செய்திகள்

காசாவில் நிலையான போர் நிறுத்தத்திற்கு கனடிய  பிரதமர் அழைப்பு

இஸ்ரேலும் கமாசும்  “நிலையான போர் நிறுத்தத்தை” நோக்கி செயல்பட வேண்டும் என கனடிய  பிரதமர் Justin Trudeau வலியுறுத்தினார்

மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் வாக்கெடுப்புக்கு சில மணி நேரம் முன்னதாக பிரதமரின் இந்த கருத்து வெளியானது.

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள், அமைதியான நாடுகளில் இஸ்ரேலியர்களும் பாலஸ்தீனியர்களும் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ்வதை உறுதிசெய்ய கனடா உறுதிபூண்டுள்ளது என Justin Trudeau தெரிவித்தார்.

கனடிய பிரதமர், ஆஸ்திரேலிய, நியூசிலாந்து பிரதமர்களுடன் இணைந்து இந்த விடயத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கை கமாஸ் பணயக் கைதிகளை விடுவிக்க அழைப்பு விடுக்கிறது.

தவிரவும் கமாஸ் குழு பாலியல் வன்முறைக்கு பொறுப்பானது என குறிப்பிடுவதுடன்,
பாலஸ்தீனிய குடிமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதாக கூறுகிறது

செவ்வாய்கிழமை  (12) Justin Trudeau இஸ்ரேலிய பிரதமர் Benjamin Netanyahu உடன் உரையாடினார்.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

Toronto துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – ஒருவர் காயம்

Lankathas Pathmanathan

2020ஆம் ஆண்டை விட, Omicron திரிபின் முதல் 40 நாட்களில் அதிக தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment