December 12, 2024
தேசியம்
செய்திகள்

இஸ்ரேலில் நான்காவது கனேடியர் பலி!

இஸ்ரேலில் பலியான கனேடியர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது

இசை விழாவில் கலந்து கொண்டபோது ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் கனேடிய-இஸ்ரேலிய பெண், பலியாகியுள்ளார் என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

22 வயதான Shir Georgy பலியாகியுள்ளார் என குடும்பத்தினர் சனிக்கிழமை (14) உறுதிப்படுத்தினர்.

இவர் முன்னர் காணாமல் போனவராக கருதப்பட்டவர்.

ஹமாஸ் போராளிகள் கடந்த வாரம் இஸ்ரேலில் திடீர் தாக்குதலை ஆரம்பித்தனர்.

இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் குறைந்தது 2,200 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இவர்களில் நான்கு கனடியர்களும் அடங்குகின்றனர்.

Ottawa நகரை சேர்ந்த 33 வயதான Adi Vital-Kaploun, Montreal நகரை சேர்ந்த 33 வயதான Alexandre Look, Vancouver நகரை சேர்ந்த 24 வயதான Ben Mizrachi ஆகியோர் இஸ்ரேலில் பலியாகிய கனடியர்கள் என குடும்பத்தினர் ஏற்கனவே உறுதிப்படுத்தினர்.

தவிரவும் இஸ்ரேலில் மூன்று கனடியர்கள் தொடர்ந்து காணாமல் போயுள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களின் அடையாளத்தை அரசாங்கம் உறுதிப்படுத்தவில்லை.

ஆனால் 70 வயதான Judih Weinstein Haggai, Tifferet Lapidot, 74 வயதான Vivian Silver ஆகிய கனடியர்கள் இஸ்ரேலில் காணாமல் போயுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

Related posts

அதிகரிக்கும் காட்டுத்தீ அபாயத்திற்கு தயாராகும் Alberta

Lankathas Pathmanathan

Stanley கோப்பை வெற்றியை தவற விட்ட Oilers

Lankathas Pathmanathan

ஜெருசலேம் குண்டுவெடிப்பில் கனடிய இளைஞன் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment