இஸ்ரேலில் சிக்கியுள்ள கனேடிய குடிமக்கள், அவர்களின் குடும்பங்களை வெளியேற்றும் நகர்வு வார இறுதிக்குள் ஆரம்பிக்கவுள்ளது.
கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly புதன்கிழமை (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
இஸ்ரேலில் சிக்கியுள்ள கனேடியர்களை கனேடிய ஆயுதப்படை விமானங்கள் Tel Avivவில் இருந்து Athensசுக்கு அழைத்து வர ஏற்பாடாகியுள்ளது.
அங்கிருந்து, Air கனடா விமானத்தில் அவர்கள் கனடாவுக்கு அழைத்து வரப்படுவார்கள்.
இஸ்ரேலில் சிக்கியுள்ள கனேடியர்கள் வெளியேறுவதற்கு உதவுவதாக கனேடிய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (10) இரவு முதலில் அறிவித்தது.
இந்த நிலையில் இரண்டு கனேடிய பிரஜைகள் இஸ்ரேலில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
மூன்றாவது கனடியர் இறந்துவிட்டதாக கருதப்படுகிறது.
4,249 கனடியர்கள் இஸ்ரேலில் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
காசா (Gaza), மேற்குக் கரையில் (West Bank) மேலும் 476 கனடியர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.