தேசியம்
செய்திகள்

B.C. விமான விபத்தில் மூவர் பலி

British Colombiaவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

Chilliwack, British Colombiaவில் இந்த விபத்து வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

Chilliwack நகராட்சி விமான நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வனப்பகுதியில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.

பலியானவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதில் வேறு எவரும் காயமடையவில்லை என RCMP கூறியது.

விசாரணைகள் தொடரும் நிலையில் விபத்துக்கான காரணம் குறித்த எந்த விவரங்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.

Related posts

பாலியல் வன்கொடுமை குற்றத்தை முன்னாள் Parti Québécois தலைவர் ஒப்புக் கொண்டார்

Torontoவில் அமைந்துள்ள ஜேர்மன் துணைத் தூதரகத்தின் முன்பாக கனேடிய தமிழர்களின் ஆர்ப்பாட்டம்

Gaya Raja

Digital வரி திட்டங்களை கைவிட கனடாவை வலியுறுத்தும் அமெரிக்கா

Lankathas Pathmanathan

Leave a Comment